100 கோடிபேருக்கு தடுப்பூசி செலுத்தி சீனா உலக சாதனை.

0
77

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொவிட் வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்துள்ளது. சீன சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் செங்க் இக்சின் தெரிவித்து உள்ளதாவது:

சீனாவில் தற்போது கொவிட் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கவில்லை. அந்த வகையில் சீனாவில் நான்கு தடுப்பூசிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தடுப்பூசிகள் அவசர கால அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சீனாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஜூன் 20 ஆம் திகதி வரை 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை, உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு. இதில் 10 கோடி தடுப்பூசிகள் கடந்த 5 நாட்களில் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here