12 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் கைது.

0
92

12 இலட்ச ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 67 கிராமுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, சகோதரி, தம்பி, அவர்களது உறவினர் பெண்ணும் சபுகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சபுகஸ்கந்த வை சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற ஓட்டோ ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்ததில், ஓட்டோவின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் கைப்பையிலிருந்த ஹெரோயின், போதைப்பொருள் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுத் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், பேலியாகொட பொரணுவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதைப்பொருள் குற்றத்துக்காக சிறைச்சாலையில் உள்ள பிரதான போதைப்பொருள் வர்த்தகராலேயே இந்த போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here