13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது.

0
13

தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை நடை பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருப்பது இதுதான் முதல் முறை என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அது நோக்கப்படுகின்றது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.  இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்வதில் முக்கிய பங்காற்றியது ரெலோ – அதாவது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தான்.

முதலில் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த எங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற ஒரு அரசியல் தீர்வே எங்களுடைய நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டிருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற இந்தியாவைக் கோருவதற்கு, அதன் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. இலங்கையை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதற்கான கோரிக்கையை பொதுத் தரப்பிலிருக்கின்ற தமிழர் தரப்பினால் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது அரசியல் தீர்வாக அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கின்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும்என்பது தான் எங்கள் கோரிக்கை. இந்தக்கோரிக்கயைின் ஊடாக சில விடயங்களை நாங்கள் எட்ட விரும்புகின்றோம் என ‘ரெலோ’ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சுரேந்திரன் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here