14 நாட்கள் கடந்தும் மட்டக்களப்பு மாமாங்க பிரதேசம் விடுவிக்க படாதது ஏன் ?

0
28

அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டத்தை அடுத்து கடந்த 24 ம் திகதி தனிமைப்படுத்தபட்ட பகுதியாக மாமாங்கம் கிராமம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இன்றுடன் 14 நாட்கள் கடந்தும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படாத நிலையில்  பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுகாதார பரிசோதகர்கள் தங்களது தொழில் உரிமை சார்ந்து வேலை நிறுத்த போரட்டத்தில் இருந்ததன் காரணமாக அதிக தினக்கூலிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அன்றாடம் கூலி வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை போக்கும் சிலருக்கு நிவாரண பொதிகள் வழங்கியிருந்தாலும் அதிலும் பழுதடைந்த பொருட்களும்,சிவப்பரிசி என்பன வழங்கப்பட்டுள்ளதால் மிகவும் துன்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே சம்மந்தபட்ட அதிகாரிகள் ஒரு கிராமத்தை அடைத்து வைத்து விட்டு தங்களது தொழில் சார்ந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது மிகவும் வேதனையான விடயம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here