15 வயதான சிறுமி நாட்டின் பல பகுதிகளுக்கு எவ்வாறு அழைத்து செல்லப்பட்டார்? விசாரணைக்கு உத்தரவு.

0
27

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் 15 வயதான சிறுமி நாட்டின் பல பகுதிகளுக்கு எவ்வாறு அழைத்து செல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் லோசனி அபேவிக்ரம, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கோவிட் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், சிறுமி அழைத்து செல்லப்பட்டமை, பாலியல் துஷ்பிரயோகம் நடந்த இடம் மற்றும் இந்தச் செயலுக்கு உதவியவர்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை அடையாளம் காண அணிவகுப்பை வழங்கும்போது நீதவான் லோசனி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here