நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15,000இற்கும் மேற்பட்ட சிறிய உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் ஆகியன மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகங்கள், சமையல் எரிவாயு கிடைக்கின்றபோதிலும் அவை அவர்களது நாளாந்த தேவைக்கு பற்றாக்குறையாக காணப்படுவதன் காரணத்தினாலேயே விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.