இலங்கையில் மேலும் 1,709 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 257,217 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 223,471 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ள நிலையில், தொற்றுக்குள்ளான 3,030 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.