187 அடி உயரமான பௌத்த தேவதைக்கு முக கவசம் அணிவித்த ஜப்பானியர்கள் .

0
106

ஜப்பானிலுள்ள 187 அடி உயரமான பௌத்த தேவதை சிலையொன்றுக்கு 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.

கனோன் மற்றும் குவாய் யின் என அழைக்கப்படும் கருணை தேவதையின் (Goddess of Mercy) சிலை பிரமாண்ட சிலை ஜப்பானின் அய்ஸுவாகாமட்ஸு (Aizuwakamatsu)  நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

57 மீற்றர்கள் (187 அடி) உயரமான சிலை இது. இச்சிலைக்கு இன்று முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.

இதற்காக 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் பயன்படுத்தப்பட்டது. ஊழியர்கள் நால்வர் கயிறுகள் வழியாக ஏறிச்சென்று இச்சிலைக்கு முகக்கவசம் அணிவித்தனர்.

கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரார்த்தித்து இம்முகக்கவசம் அணிவிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here