20 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது.

0
13

அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை மரக்குற்றிகளை விடுவிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (12) ஆண்டிகம – புத்திகம பகுதியில் வைத்து, இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட வன அலுவலகத்தின் மஹாகும்புக்கடவல வன பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஆண்டிகம பகுதியில், அனுமதிப்பத்திரம் பெறாமல் நடத்தப்பட்டு வரும் மரக் கொட்டகை ஒன்றுக்கு, லொறி ஒன்றில் அனுமதிப்பத்திரம் பெறாமல், இவ்வாறு மரக்குற்றிகளை எடுத்துச் சென்றபோது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பின்னர், மரக் குற்றிகளை கொண்டு சென்ற குறித்த லொறியின் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர், லொறியையும் அனுமதிப்பத்திரம் பெறாமல் கொண்டு சென்றதாக கூறப்படும் மரக்குற்றிகளையும் விடுவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் இருந்து சந்தேக நபரை விடுவிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாயை, குறித்த வன பாதுகபாப்பு உத்தியோகத்தர் இலஞ்சமாக கோரியுள்ளார்.

அதனை சந்தேகநபர் ஆண்டிகம – புத்திகம பகுதியில் வைத்து நேற்று (12) வழங்கிய போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளால், குறித்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here