2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ​யோசனைகள் பாராளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.

0
18

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ​யோசனைகள் பாராளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். அதற்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் நேற்று (08) சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர்
10ஆம் திகதி நடத்தப்படும். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (07) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ​போதே மேற்கண்ட தீர்மானம்
எட்டப்பட்டுள்ளது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு  செலவினமாக பாதுகாப்பு அமைச்சுக்கு 37,304 கோடியே 58,60,000 ரூபாயும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 10,655 கோடியே 8,650,000 ரூபாயும் அரச பாதுகாப்பு  அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு 1,051 கோடியே 5,765,000 ரூபாயுமென மொத்தமாக 49,012கோடியே 2,75,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மாகாண,உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்கு 32,910 கோடியே 8,000,000 ரூபாயும் நெடுஞ் சாலைகள்  அமைச்சுக்கு 25,019 கோடியே 1,200,000 ரூபாயும்  நிதி அமைச்சுக்கு 18,591 கோடியே 5,993,000 ரூபாயும் சுகாதார அமைச்சுக்கு 15,352 கோடியே 8,998,000 ரூபாயும் கல்வி அமைச்சுக்கு 12,760 கோடியே 5,000,000 ரூபாயும் போக்குவரத்து அமைச்சுக்கு 3,122 கோடியே 9,950,000 ரூபாயும் கமத்தொழில் அமைச்சுக்கு 2,431கோடியே 5,100,000 ரூபாயும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சுக்கு 1,430 கோடியே 4,965,000 ரூபாயும் மிகுதி ஏனைய அமைச்சுக்கள்,இராஜாங்க அமைச்சுக்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விசேட செலவீனத்துக்காக  1,216 கோடியே  1,580,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் செலவீனத்துக்கு 278 கோடியே 8,800,000 ரூபாயும் பிரதமரின் செலவீனத்துக்கு 139 கோடியே 1,950,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here