FREELANCER
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து சர்வதேச மற்றும் 48வது தேசிய மட்ட போட்டியில் பற்றியவர்களையும் வெற்றியீட்டியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வன்னிய சிங்கம் வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் U. சிவராசா கலந்து கொண்டார், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட Ceri நிறுவன தேசிய இயக்குனர் தர்ஷன் கலந்து கொண்டார், மேலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்களான திருமதி. எல் .பிரசாந்தன் திருமதி எஸ். சதாகரன் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆன திருமதி ஜெ. கணேசமூர்த்தி திருமதி .C. பிரணவ சோதி , நிர்வாக உத்தியோகத்த திருமதி.T. சந்திரமோகன் விளையாட்டு உத்தியோகத்தர் A.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முதலாவதாக மங்கள விளக்கேற்றல் மற்றும் மௌன இறை வணக்கத்துடன் ஆரம்பமானது இந்நிகழ்வின் வரவேற்புரையானது உதவிப் பிரதேச செயலாளர் சு.சதாகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது தொடர்ந்து தலைமை உரையினை பிரதேச செயலாளர் வன்னிய சிங்கம் வாசுதேவன் அவர்களால் விளையாட்டு துறையில் சாதித்தவர்களை பாராட்டியது டன் விளையாட்டு நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரையாற்றினார்.
48வது
தேசியமட்ட Taekwondo போட்டியில் 56 கிலோ கிராம் கீழ் பிரிவில் வெண்கல
பதக்கம் வென்ற Y.tharaniya க்கும் அவரது பயிற்சியாளர் S.Suhithan அவர்களும்
கௌரவிக்கப்பட்டனர் மேலும் Teakwondo போட்டியில் 52 கிலோ கிராம் பிரிவில்
வெண்கலப் பதக்கம் வென்ற C.V.Ann Sofna மற்றும் 73 கிலோகிராம் நிறை பிரிவில்
வெண்கலம் வென்ற S.Nilukshaka அவர்களுக்கு கௌரவித்து நினைவுச் சின்னம்
வழங்கியதுடன் இவர்கள் இருவரது பயிற்றுனராக S Gowsigan கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 55 கிலோகிராம் நிறை பிரிவில் கராத்தே குமுத்தே பிரிவில் முதல் தடவையாக தங்கம் பதக்கம் வென்று ஆர். துசியந்தன் கௌரவிக்கப்பட்டார். இவர் சைனாவில் நடைபெற்ற ஆசிய சிரேஷ்ட பிரிவில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது அத்துடன் ஆர் துஷ்யந்தனின் பயிற்சியாளர் H.R.Zilva கௌரவிக்கப்பட்டார் அணிகளை ஒழுங்குப்படுத்தி பொறுப்பாளராக செய்யப்பட்டு வெற்றி அடையச் மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்A.Sivakumar அவர்களுக்கு மாகாண பணிப்பாளரினாலும் ஏனைய அதிதிகளாலும் கௌரவித்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாட்டு உத்தியோகத்தர் நன்றியுரை வழங்கி நிகழ்வு நிறைவு பெற்றது.