FREELANCER
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வன்னிய சிங்கம் வாசுதேவன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்லடி வேலூர் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க நிதியில் மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தரம் 10 வகுப்புக்கு அவசியமான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் 2024.11.21 வழங்கி வைக்கப்பட்டது .
இன் நிகழ்வானது பாடசாலை அதிபர் S.பிரான்சிஸ் தலைமையில் இடம் பெற்றது , இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வன்னிய சிங்கம் வாசுதேவன் அவர்கள் கலந்து கொண்டார் .
மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கல்லடி வேலூர் கிராம உத்தியோகத்தர் ,பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் , கல்லடி வேலூர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் , செயலாளர் , பொருளாளர் மற்றும் சங்க நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .