
வரதன்
300 ஆண்டுகளுக்கு பின் வரும் பெரும் சிவராத்திரி விரத பெரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் 108 சிவ லிங்கங்களுக்கு நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு
இந்துக்களின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிவராத்திரி பெரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் 108 சிவலிங்கங்களுக்கு நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு இன்று காலை சிறப்பாக இடம் பெற்றது இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்நிகழ்வு இடம் பெற்றது
செந்தமிழ் ஆகம முறைப்படி இவ் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முருகப்பிள்ளை ஜெயபாலன் குருக்களினால் விசேட பூஜைகள் நடைபெற்றது. மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் செந்தமிழ் ஆகம முறைப்படி பூசைகள் அர்ச்சனைகள் இடம் பெறுவது விசேட அம்சமாகும்
சிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் அடியார்களுக்காக சிவலிங்கங்களுக்கு பூசை செய்வதற்கான சந்தர்ப்பம் இவ்வாலயத்தில் வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்
மட்டக்களப்பு மயிலம்பாவளியில் அமைக்கப்பட்டுள்ள சிவன் ஆதீனமானது சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை தொடக்கம் விசேட பூஜைகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டது சைவ சித்தாந்தத்தையும் பன்னிரு திருமுறை களையும் அடிப்படையாகக் கொண்டு ஆக முறைப்படி ஆலயத்தில் பூஜைகள் இடம் பெறுகின்றமை விசேட அம்சமாகும்
300 வருடங்களுக்குப் பின்பு அதே நாளில் சிவராத்திரி வருவது இம்முறை விசேட அம்சமாகும் அடியார்களது மனக்குறைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு அவர்களது வேண்டுதலும் இந்நாளில் நிறைவேற்றப்படுவது விசேட அம்சமாகும் இந்நாளில் சிவனை வழிபடுவது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது
பெருமளவான பக்தர்கள் இன்று தங்களின் கரங்களினால் 108 சிவலிங்கங்களுக்கு நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மாலை விசேட யாக பூஜை மற்றும் அபிசேக பூஜைகள் நடைபெற வுள்ளது