23 சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0
27

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரதேசத்திலுள்ள  ஐந்து இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த  குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டிருந்த சாரதிகள் 23 பேர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி வாவிக்குள் மணல் அகழ்வில் ஈடுபட்டமை மற்றும் ஏற்றிச்சென்றமை இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

கரடியனாறு பொலிஸார் மற்றும் அறந்தலாவ விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, இச்சட்டவிரோதச் செற்பாடு தடுக்கப்பட்டுள்ளது.

முந்தன் குமாரவெளி வாவியில் மணல் அகழ்ந்த 10 உழவு இயந்திரங்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை,  கொஸ்கொல்ல, ஈரளக்குளம், மரப்பாலம் மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரங்களையும், கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு சந்தேகநபர்களின் 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் 20 உழவு இயந்திரங்களும் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here