25 தடவைகள் கழுவி பயன்படுத்தக் கூடிய முகக்கவசம் 200 ரூபாவுக்கு சதொச ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

0
45

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை சந்தையில் விற்கப்படும் விலையை விட குறைந்த விலைக்கு சதொச ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் பிரகாரம் எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ் உடைய முகக்கவசம் ஒன்றை 10 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சில் .இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்கள் தற்போது சந்தையில் விற்கப்படும் விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தீர்மானித்திருக்கிறோம். இதன் ஆரம்ப நடவடிக்கையாக 14 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவரும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய முகக்கவசம் 10 ருபாவுக்கு விற்பனை செய்யப்படும். பாடசாலைகள் ஆரம்பிக்க இருப்பதால் மாணவர்களை இலக்காகக்கொண்டே இதனை முன்னெடுத்திருக்கிறோம்.

அதேபோன்று பேராதனை பல்கலைக்கலத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் 25 தடவைகள் கழுவி பயன்படுத்தக் கூடிய முகக்கவசம் 200 ரூபாவுக்கு சதொச ஊடாக பெற்றுக் கொள்ளலாம். பக்றீரியாக்களில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில், மிகவும் தரம்மிக்கதாகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான அளவிலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அரிசி வகைகளையும்  கிலோ 100 ரூபாவுக்கு குறைவாக சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தற்போது சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கும் வெள்ளை பச்சை அரிசி 92 ரூபாவுக்கும் நாட்டரிசி 97 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here