260 கைதிகளின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ,ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

0
66

சுமார் 260 கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறை மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏற்கனவே நீதித்துறை அமைச்சர் மூலம் ஜனாதிபதிக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 260 கைதிகளின் தண்டனையை மாற்றப்படுமென சிறைத் துறைத் தலைவர்கள் நம்புகின்றனர்.

சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலையில் உள்ள மரணதண்டனை கைதிகள் துமிந்த சில்வாவுக்கு விடுதலை வழங்கப்பட்டதுபோல் தமக்கும் விடுதலை வழங்கப்படவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here