27 நாட்களுக்கு பெற்றோலும் 24 நாட்களுக்கு டீசலும் கையிருப்பில் உள்ளன .

0
28

எரிபொருளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவி வருவதாகப் பரப்பபடும் வந்திகள் பொய்யானவை என்று  தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சியினர் பொய்யான வதந்திகளைப் பரப்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுவதனை நாம் ஒப்புக்கொள்கிறோம். எனினும்   27 நாட்களுக்கு பெற்றோலும் 24 நாட்களுக்கு டீசலும் கையிருப்பில் உள்ளன என்று குறிப்பிட்டார். 

மேலும்,  வெளிநாட்டு நாணய மாற்று நெருக்கடியாலேயே எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு அரசாங்கம் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here