0
22

மாகாணங்களுக்கு இடையிலான பொதுபோக்குவரத்துச் சேவை,  அத்தியாவசிய சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (14) முதல் மீள ஆரம்பிக்கப்படும்.

அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில்இடம் பெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது. இதனை விரிவுப்படுததும் வகையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் தனியார் மற்றும் அரச பஸ்களும், ரயில்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புதன்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும். அத்தியாவசிய சேவையை கருத்திற் கொண்டு காலை மற்றும் மாலை அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here