30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் பெறுவது அவசியமாகும்.

0
40

மட்டக்களப்புக்கு எதிர்வரும் நாள்களில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளதோடு, மாவட்டத்தில் இதுவரை 142,732 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளிலும் பாடசாலைகள் பொது இடங்களிலும் தடுப்பூசிகள் தற்போது ஏற்றப்பட்டு வருகின்றன எனவும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் பெறுவது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 68 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதோடு, மாவட்டத்தில் மொத்தமாக 8,275 பேர் தொற்றுக்குள்ளாகி, 116 பேர் மரணமடைந்தும், 757 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்றுவருதோடு, 6,417 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வெளிநாடு செல்வோர் தமக்கான தடுப்பூசிகளை நிகழ்நிலையில் விண்ணப்பித்து பெற முடியுமெனவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here