40 லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வரவுள்ளன.

0
23

எதிர்வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீனாவில் இருந்து மேலும் 40 லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளன.

சீனாவின் இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இதுவரையில், இலங்கை, சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய அளவு தடுப்பூசி தொகை இதுவாக இருக்கும். இந்த 40 லட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கைக்கு கிடைக்கும் சீனாவின் சினொர்பார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1கோடியே 20லட்சமாக அதிகரிக்கும்.

2021 ஆகஸ்ட் 04 ஆம் திகதி இந்த தடுப்பூசி தொகை இலங்கைக்கு கிடைக்கும் என பீஜிங் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 19 லட்சத்து 19 ஆயிரம் ஆகும். இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 30 அகவைக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த இலங்கை அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இலங்கையில் 30 அகவைக்கு மேற்பட்ட மக்கள் தொகையான 1கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 906 பேரில், 68% வீதமானோர் இதுவரை, தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.மேலும் 16 வீதமானோர், தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here