60 மணித்தியாலங்கள் ஊதியமற்ற சமூக சேவை செய்யப்போகும் அவுஸ்திரேலியப் பெண்.

0
34

அகதிகளுக்கு ஆதரவாக கடந்த ஒக்டோபர் மாதம் பிறிஸ்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கலந்துகொண்ட நிகழ்வுக்கு வெளியில் பெருமளவில் அகதிகள் நல அமைப்பினர் கூடினார்கள். பிரதமரின் உத்தியோகபூர்வ வாகனத்தின் மீது தக்காளி மற்றும் சிவப்பு திரவத்தை எறிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

‘எட்டு வருடங்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யாமல் அப்படி என்ன அரசாட்சி செய்கிறாய்” – என்று கெட்ட வார்த்தைகளில் பிரதமரை திட்டினார்கள்.

வன்முறை வழியில் முன்னெடுக்கப்பட்டதாக பொலீஸாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், குற்றமிழைத்தார் என்று வழக்கு தொடரப்பட்ட பெண், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் 60 மணித்தியாலங்கள் ஊதியமற்ற சமூக சேவை செய்யவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here