76 மரண தண்டனை கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

0
62

மரண தண்டனை விதிக்கப்பட்டு மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகள் 76 பேரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

“இன்று (நேற்று) பகல் போசனத்தை எடுத்துக்கொள்ளாது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர்”என சிறைச்சாலைகள் ஊடகப்  பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தங்களுக்கான தண்டனையை வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றுமாறு மரண தண்டனை கைதிகள் கோரியுள்ளனர்.

இந்நிலையில்  இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் சிறைச்சாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here