ATM மெஷினில் இருந்து தானாகவே வெளியே வந்த 95 ,000 ரூபாவை வங்கியில் ஒப்படைத்த இளைஞர்.

0
30

இலங்கை வங்கிக் கிளை ஒன்றின் ஏரிஎம். இயந்திரத்தின் ஊடாக பணம் பெற்றுக் கொள்வதற்காக சென்ற இளைஞர் ஒருவர் அந்த இயந்திரத்தில் அகப்பட்டிருந்த 95, 000 ரூபா பணத்தொகை கிடைக்கவே, அதனை வங்கி அதிகாரியிடம் கையளித்த சம்பவமொன்று அண்மையில் பதிவானது.

இவ்வாறு பணத்தை வங்கி அதிகாரியிடம் கையளித்தவர் பொத்திவெலகொட பிரதேசத்தில் வசித்துவரும் எம்.ஜே. லசித் இந்திக்க எனப்படும் 27 வயதுடைய இளைஞராவார்.

ஏரிஎம் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்பதற்காக இலங்கை வங்கியின் துரித அழைப்பு சேவை இலக்கத்துக்கு குறித்த இளைஞர் தொடர்புகொண்டு நடந்தவற்றை தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து , பணத்தை மறுநாள் காலை தல்கஸ்வலவிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு சென்று, அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விடயத்தை கூறியதையடுத்து, இளைஞரிடம் வந்த வங்கியின் அதிகாரி ஒருவர் குறித்த 95,000 ரூபா பணத்தொகையை பெற்றுக்கொண்டார்.

இந்த பணத்தை எனக்கு சொந்தமாக்கியிருக்க முடியும். எனினும், மனிதாபிமானம் என்பது அதுவல்ல’ என்று இன் முகத்துடன் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here