HELP EVER அமைப்பினரால் கல்முனை-நட்பிட்டிமுனை சிவ சக்தி வித்தியாலயத்தில் 36 மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டதோடு மேலும் 22 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

0
338

மட்டக்களப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் “HELP EVER ” தன்னார்வ அமைப்பினரால் நேற்றைய தினம் (2021.07.23) கல்முனை, நட்பிட்டிமுனை சிவ சக்தி வித்தியாலயத்தில் ,பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் 36 மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டதோடு மேலும் 22 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன
இந்த நிகழ்வில் HELP EVER அமைப்பின் அங்கத்தவர்களும் SOUND OF NATURE அமைப்பின் ஸ்தாபகர் காயத்ரி அவர்களும் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பேராதனை தமிழ் சங்கத்தின் மர நடுகை திட்டத்தின் பரிந்துரையில் நட்பிட்டிமுனை சிவ சக்தி வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here