யாழ்ப்பாணம் - வடமாராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று (24) உயிரிழந்துள்ளது.
பால் கொடுக்கப்பட்ட போது புரைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த குழந்தை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.