மன்னார் தாழ்வுபாடு கடல் பகுதி ஊடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட ,ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 12 பேர் நேற்று கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.