கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கையொப்பத்தில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. அதற்கமைய "போர்ட் சிட்டி" பகுதிக்குள் செயல்பட உரிமம் பெற முயற்சிக்கும் வணிக நிறுவனங்கள் 2,500 அமெரிக்க டொலர் விண்ணப்பக் கட்டணத்தையும், 2,000 அமெரிக்க டொலர் வருடாந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும். அங்கீகரிக்கப்பட்ட நபராகத் தகுதிபெறுவதற்கான உரிமத்திற்கான விண்ணப்பம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகாரப் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் வியாபார செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவதற்கான விண்ணப்பம், அப்பகுதியில் மற்றும் அப்பகுதியிலிருந்து வணிகத்தில் ஈடுபட முன்வரும் நபரால் செய்யப்படலாம் எனவும், கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகாரசபை, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளின் படி இது தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விண்ணப்பம் மற்றும் துணை ஆவணங்களின் மதிப்பீட்டில், ஆணையம் கொள்கையளவில் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும், ஆனால் உரிமம் வழங்குவதற்கு முன் திருப்திப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கொள்கையில் ஒப்புதல் கடிதத்தை வழங்கும் எனவும், வணிகங்கள் வெளிநாட்டு வங்கிச் சேவைக்கான வழக்கிலின் போது மத்திய வங்கி ஒப்புதல் உட்பட பொருந்தக்கூடிய பிற விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.