அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார குறித்து வழங்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (28) நீதிப் பேராணை (ரிட்) உத்தரவை பிறப்பித்தது.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த ஜனவரி 18ஆம் திகதி கிடைத்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆணைக்குழுவினால் தான் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்துச் செய்து நீதிப் பேராணையை (ரிட்) பிறப்பிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதின்ற நீதியர்சர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன, டி. எம். சமரகோன் மற்றும் லஃபர் தாஹிர் ஆகியோர் அடங்கிய குழாமினால் அந்த ரிட் மனு குறித்த தீர்ப்பு இன்று (28) வழங்கப்பட்டது.