சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வவுனியா மற்றும் திருகோணமலை -மொரவெவ பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.