கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி ஒரு கோடியே 95 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை கொண்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் வசமிருந்த 218 கையடக்க தொலைபேசிகள், 8 தங்க பாளங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக தெரியவருகிறது.
அத்துடன், 22 இலட்சம் பெறுமதியான இரண்டு தங்கச் சங்கிலிகளும், ரூபா 60 ஆயிரம் பெறுமதியான மடிக்கணனி ஒன்றும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.