இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் .

 


இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானதாக  காணப்படுகின்ற போதிலும், கடன் நிவாரணம் குறித்த  கலந்துரையாடல்களில் தீர்மானம் எடுக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

அத்துடன்  இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவாக தீர்மானம் எடுக்க  பட்சத்தில்  இலங்கை நெருக்கடியிலிருந்து விரைவாக மீள முடியும் என  சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்படுவதானது, நாணய நிதியச் சபையின் அனுமதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழு ஈடுபாட்டுடன் செயற்படுகின்றது.  ஆனால் பல்தரப்பு கடன் வழங்குநர்கள்  காலக்கெடு நிச்சயமற்றதாக இருப்பதாகவும், எனவே அவர்களுடன் முன்னெடுக்கும் கலந்துரையாடல்களிலேயே இவை தங்கியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாதற்கான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தற்போது வரையில் இலங்கைக்கு சாதகமான பதிலை ஐ.எம்.எப் வழங்கவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.