ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 


பணிகளில் ஈடுபடும்போது, பொதுச் சேவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே  இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின்படி ஆண்கள் நீள் கால்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய உடையை அணிய வேண்டும்.

அதே நேரத்தில் பெண்கள் புடவைகள். கண்டியன் (ஓசாரி) அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணியவேண்டும்.

இதேவேளை, பாராளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச விழாக்கள் அல்லது மாநாடுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்குள் அரச அதிகாரிகள் தேசிய உடை அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடையை அணிந்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.