இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும்- வை.கோ

 


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அந்தக் கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டும் ஐ.நாவில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.