தனது பிறந்த நாளைக் கொண்டாட இருந்த பாடசாலை மாணவர் ஒருவர் இன்று கடலில் அடித்து செல்லப்பட்டதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ரன்முத்து தேரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே காணாமல் போனவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இரண்டு நண்பர்களுடன் பயாகலா புனித அந்தோனி வீதியின் முனையிலுள்ள கல் சுவருக்கு அருகில் நீந்திக் கொண்டிருந்தவேளை, திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அருகில் இருந்த ஒருவர் கடலில் குதித்து அலைகளால் அடித்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்ற முற்பட்டபோதிலும் மற்ற இரு மாணவர்களும் மீட்கப்பட்டனர்.
காணாமல் போன மாணவனின் வீட்டில் இன்று மதியம் பிறந்தநாள் விழா நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டிருந்ததாகவும், அதனை கொண்டாட வந்த நண்பர்கள் இருவருடன் நீராடச்
சென்ற போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.