சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்திருந்த கொக்கேய்ன் போதைப்பொருடன் உகாண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரின் டோஹா நகரம் ஊடாக இலங்கைக்கு வந்த 43 வயதுடைய உகாண்டா பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் நாட்டுக்கு வந்த
உகண்டா நாட்டு பிரஜையை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 17 கொக்கேன் பொதிகளை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.