முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் நலனுக்காக செயற்பட முடியாதவிடத்து இராஜனாமா செய்ய போவதாக தொழிற் சங்கத்தின் தலைவர் முபாறக் தெரிவிப்பு!!
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ளும் சுற்றுநிருபங்களை நடைமுறைப்படுத்த முடியாது போனால் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இராஜனாமா செய்ய போவதாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ. ஜீ. முபாறக் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் செய்தி பிரிவான “முகாமை” க்கு கருத்து தெரிவிக்கையில் தொழிற்சங்க தலைவர் ஏ.ஜி.முபாரக் குறிப்பிட்டுள்ளதாவது,
வவுணதீவு பிரதேச சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்களை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதுடன், வவுணதீவு பிரதேச சபை செயலாளரின் ஊழல் மோசடிகள் யாவும் வெகு விரைவில் வெளியில் கொண்டு வரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.