ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாட்டில் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைமைத்துவம் இம்முறை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அதற்கமைய, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
2016ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கையின் விளைவே இலங்கையின் நிதியமைச்சருக்கு தலைமைப் பதவி கிடைக்கவுள்ளது.
2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாடு, நாட்டின் பொருளாதார மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அறிவித்திருந்தார்.