மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 



ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் திகதி விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்   15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.