தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.