வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.

 


இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை. ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவானது.

இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தைக்காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5 வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.