நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை

 


நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று (24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று( 25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இன்று (25) வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.