பிலிப்பைன்ஸை புயல் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 




கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி   70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிண்டனாவ் தீவில் உள்ள மகுயின்டானாவ் மாகாணத்தில், ‘நல்கே’ புயல் மிகவும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கோடாபாடோ நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.