கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண்ணொருவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.