சீன பெற்றோலிய விநியோக நிறுவனஅதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார்.

 


மிகப் பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோ சைனா அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டதாக, அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பெட்ரோ சைனா அதிக அளவில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 10 ஆண்டுகளாக சிறந்த புரிந்துணர்வை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.