அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்யபப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


நாட்டில் ஒரு சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,  அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்யபப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விகர்மசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து அண்மையில் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, உயர்நீதிமன்ற வளாகம், பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த பிரதேசங்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி ஒன்று கூடல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இது இலங்கை குடி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றில் சோஷலிய இளைஞர் முன்னணியினால் அடிப்படை உரிமை மனு ஒன்ம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.