ருத்ரா-விசேட நிருபர்
பிரகஸ்பதி எனப்படும் குரு பகவானின் வழிபாட்டுக்குரிய தினமாக வியாழக்கிழமை கருதப்படுகின்றது.
இந்த மௌன விரதம் 3 வகைப்படும்.
01.உடல் மௌனம் :- உடலை சிறிதும் அசைக்காமல் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருத்தல்.
02. வாக்கு மௌனம் :-
பேசாமல் அமைதி காப்பது ஆகும்.
03. மன மௌனம் :-
மனதாலும் மௌனமாக இருப்பது.
விரத அனுட்டானம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
வியாழக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு எதுவுமே சாப்பிடாது அருகில் உள்ள கோவில் சென்று குரு பகவானுக்கு மஞ்சள் மலர் சாற்றி வழிபட வேண்டும்.
சந்தனம், மஞ்சள் என்பவற்றினால் அபிஷேகம் செய்து மஞ்சள் திற இனிப்புக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
விரத நேரத்தில் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் என்பவற்றைப் படிப்பது நல்லது.
இரவில் உப்புச் சேரா உணவினை உண்டு விரதத்தினை முடிக்கலாம்.
பலன்கள்
:::::::::::::::::::::::
☆. குரு அருளால் பல யோகங்கள் கிட்டும்.
☆. திருமணத்தடை நீங்கும்.
☆. கிரகதோசம் நீங்கும்.
☆.தொழில் , வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
☆. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
☆. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குறிப்பு :- 3 வருடங்கள் தொடர்ச்சியாக வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வந்தால் வாழ்வில் குரு பகவானின் அருள் என்றென்றும் இருக்கும்.