உலகில் கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இலங்கையும் கடுமையான உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக கடுமையான பட்டினியால் அவதிப்படும் நாடுகளில் இலங்கையையும் உலக உணவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் சேர்த்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன் தொடர்புடைய அறிக்கையை மேற்கோள்காட்டி, இலங்கை உள்ளிட்ட 19 நாடுகளின் உணவுப் பாதுகாப்பு இந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் மேலும் மோசமடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, தெற்கு சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகியவை கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் பெயரிடப்பட்டுள்ளன, மேலும் இலங்கையும் அதே அபாயத்தை நெருங்குகிறது.