நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர்
பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரகுமான் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது எமது நாட்டின் பொருளாதார, அரசியல் நிலமை படுமோசமாக இருந்து வருகின்றது.
ஆனால் இந்த நிலமைக்கு காரணம் யாரென்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த நாட்டிலே ஊழல் மோசடி நிறுத்தப்பட வேண்டும் அதற்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட வேண்டும்.

இன ரீதியான மத ரீதியான வேறுபாடுகளிற்கு அப்பால் ஒரு மனிதாபிமான ரீதியான நல்லதொரு ஆட்சி முறமைக்காக ஆரம்பத்தில் இருந்து பாடுபடுகின்ற ஒரு கட்சி என்ற வகையிலே நாம் செயற்பட்டு வருகின்றோம்.