சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடலில் மிதந்த 55-60 வயது மதிக்கத்தக்க வயோதிய பெண்ணின் சடலத்தை மீட்டு கல்முனை கடற்படை முனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.