மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வீடின்றி குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த குடும்பமொன்றுக்கு வசதிகளுடன் கூடிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் வந்தறுமூலை பலாச்சோலை கிராமத்தில் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் தமது வாழ்வதரத்தை இழந்து 3பெண் பிள்ளைகலுடன் வசிக்கும் சந்திரகுமார் அஸ்வினி குடும்பத்துக்கு இவ் மனித நேய உதவி வழங்கி வைக்க்பட்டது.
சக்திகள் திருமதி திருக்குமார் கலைச்செல்வி தம்பதிகளின் நிதி பங்களிப்பில் நேற்று 43ஆவது சக்தி இல்லம் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி ஒருங்கினைப்பை இஸ்தாபகர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இவ் 43ஆவது சக்தி இல்லமானது மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் சக்தி பா. வினோராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது